"என் '40' வருஷ 'சர்வீஸ்'ல இப்படி பாத்ததே இல்ல",,.. வயத்து வலின்னு 'ஹாஸ்பிடல்' வந்த 'பொண்ணு',,.. மொத்தமா 7 கிலோ 'சைஸ்'ல... அரண்டு போன 'மருத்துவர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம், போகரோ (Bokaro) மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 17 வயது இளம்பெண் ஒருவர் வயற்று வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆறு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிட்சையின் முடிவில் அந்த பெண்ணின் வயற்றில் இருந்து சுமார் 7 கிலோ முடி அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக, அந்த பெண்ணிற்கு முடி உண்ணும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, அவை அனைத்தும் வயிற்றிற்குள் சேர்ந்து மொத்தம் 7 கிலோ பந்து உருண்டை போல வயற்றில் உருவாகியுள்ளது.
தனது 40 ஆண்டுகால மருத்துவ பணியில், ஒரு நோயாளியின் வயற்றில் இப்படி ஒரு பெரும் குவியலை பார்த்ததில்லை என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்த இளம் பெண்ணின் வயற்றில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கருதினர். ஆனால், பின்பு தான் சிறுவயது முதலே தலை முடியை உண்ணும் பழக்கம் இருந்ததால் உருவான முடியின் உருண்டை அது என தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை முடிந்த பின், இளம்பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரப்யுன்செல் குறைபாடு (Rapunzel Syndrome) அந்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதாவது நீண்ட காலத்திற்கு முடியை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் குறைபாடு ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மனைவியோட வாழ்க்கை லட்சியம் 'அது'!.. என்ன தடை வந்தாலும் கூடவே இருப்பேன்'!.. கர்ப்பிணி மனைவியின் 'லட்சியத்தை' நிறைவேற்ற.. கணவர் எடுத்த 'அதிரடி' முடிவு!
- “விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!
- புதுசா 'கல்யாணம்' ஆனவங்க... கார்ல வந்தப்போ ஆத்து 'தண்ணி'ல மூழ்கிடுச்சு... அடுத்தடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- ஒரு நீதிபதி செய்ற வேலையா இது... டபுள் மீனிங்ல... அசிங்க அசிங்கமா... நீதிபதிக்கு குட்டு வைத்த சுப்ரிம் கோர்ட்....
- திடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..! சோகத்தில் மூழ்கிய பள்ளி..!
- ‘சமையலின்போது திடீரென பறந்த குக்கர் விசில்’.. ‘பெண்ணுக்கு நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்’..
- சாக்லெட் வாங்கிக் கொடுத்து.. ‘கொடூரத் திட்டம் போட்ட தந்தை’.. ‘கையும் களவுமாகப் பிடித்த மகள்’.. அடுத்து செய்த துணிச்சல் காரியம்..
- ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த..’ 3 வயது பெண் குழந்தை.. ‘சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் கிடைத்த பயங்கரம்..’
- கொட்டித் தீர்க்கும் பருவமழை.. ‘மின்னல் தாக்கியதில் 51 பேர் பலியான பரிதாபம்..’
- ‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..!