'பொண்ணோட வயித்துக்குள்ள இவ்வளவா?... 'எப்படி எல்லாம் உள்ள போச்சு'... அதிர்ந்த மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளம்பெண்ணின் வயிற்றில் 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்கள் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் ராம்பூரத் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு தீராத வயிற்று இருந்தது. இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் நாணயம் மற்றும் சில தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெளியே எடுக்க முயற்சி செய்தார்கள். அதன்படி செப்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட ரூ.5, ரூ.10 ஆகிய மதிப்புகளை கொண்ட நாணயங்களுடன், சங்கிலி, மூக்கு வளையம், காதணி, வளையல் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1.5 கிலோ ஆகும்.

இதுகுறித்து பெண்ணின் தாயார் கூறும்போது ''எனது பெண்ணிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவள் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து விழுங்கி வந்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகள் எல்லாம் காணாமல் போனது. அப்போது தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனையில் அவள் எல்லாவற்றையும் விழுங்கியது தெரியவந்தது'' என வேதனையுடன் குறிப்பிட்டார்.

JEWELLERY, DOCTOR, STOMACH, BENGAL, MENTALLY UNSTABLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்