VIDEO: 'Money Heist' கேள்விப்பட்டிருப்பீங்க!.. இது 'Kochi Heist' மச்சி!.. செம்ம வைரல்!.. Don't miss!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல வெப் சீரியஸ் Money heist போன்ற ஒரு தொடர், நமது ஊரில் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்?.. அதை சாத்தியப்படுத்தியுள்ளது Behindwoods.

நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலக அளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணைய தொடர், Money Heist. அந்த தொடரின் 4வது சீசன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன போது, தமிழக நெட்டிசன்கள் இடையே வைரலாகி, அதில் வரும் கதாபாத்திரங்களில் அனைவரும் மூழ்கிப்போனதை பார்க்க முடிந்தது.

ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த தொடர், பணத்தை கொள்ளை அடிக்கும் கதைக் களத்தைக் கொண்டது. திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என அனைத்து தொழில்நுட்ப தளங்களிலும் பார்த்து பார்த்து செதுக்கி எடுப்பட்டதே அதன் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், இந்த Money Heist தொடரை inspiration-ஆக கொண்டு, Kochi Heist என்ற பெயரில், மலையாளத்தில் புதுமையாக எடுக்கப்பட்டுள்ள வெப் தொடரின் டிரைலர் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

வெளியான சிறிது நேரத்திலேயே அனைத்து வயதினரையும் கவர்ந்து, டாப் டிரண்டிங்கில் உள்ளது இந்த Trailer வீடியோ. டிரைலரை போலவே, Kochi Heist தொடரும் அனைத்து மக்களையும் கவர்ந்து, மிகப்பெரிய அளவில் பேசப்படும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கண்ணை இமைக்க விடாமல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் திரைக்கதை, மிக எதார்த்தமான நடிப்பு, வசனங்களே இல்லாமல் கதை சொல்லும் ஒளிப்பதிவு, துல்லியமான படத்தொகுப்பு என மலையாள திரையுலகில் புது பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் மிக நேர்த்தியாக இது படமாக்கப்பட்டுள்ளது. 

Behindwoods தயாரித்துள்ள இந்த இணைய தொடரில் கார்த்திக் ஷங்கர், தேவிகா நம்பியார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர் அதுல் இயக்கியுள்ளார். Behindwoods Ice யூடியூப் சேனலில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக இருக்கும் இந்த வெப் சீரியஸின் டிரைலரை, த்ரிஷ்யம் பட இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இன்று வெளியிட்டுள்ளார்.

Money Heist தொடர், உலகமெங்கும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறது. அது போல, Kochi Heist தொடரும், தென்னிந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்திய இணைய ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் கவர்ந்து சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

வீடியோ இணைப்பு கீழே:

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்