JEE மெயின் 2022 தேர்வு முடிவுகள்.. செண்டம் அடிச்ச 24 மாணவர்கள்.. அசர வச்ச மாநிலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த வருடத்துக்கான JEE மெயின் 2022 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ரூ.1.3 கோடி ஸ்காலர்ஷிப்பில் படிப்பு .. UNESCO தலைவர்களுக்கே ஆலோசனை சொல்ல போகும் இந்திய மாணவன்.. !

JEE மெயின்

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், இளநிலை தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் சேர JEE எனப்படும் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதவேண்டும். இது இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் என்ஐடி, ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவர். இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் முதன்மை தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

தேர்வு

இந்த வருடத்துக்கான JEE மெயின் தேர்வுக்கு 1,02, 6799 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 9,05,590 பேர் தேர்வெழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 6,48,555 ஆண்களும், 2,57,031 பெண்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதில், மொத்தம் 24 மாணவர்கள் இந்திய அளவில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா 5 பேர், ராஜஸ்தானில் இருந்து 4 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து 2 பேர், மகாராஷ்டிரா, ஹரியானா, அசாம், பீகார், கர்நாடகா, பஞ்சாப், கேரளா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாலிசெட்டி கார்த்திகேயா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த நவ்யா ஆகிய இரு மாணவிகளும் அடங்குவர்.

கடந்த ஆண்டை விட 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 44 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "நான் சேலஞ்ச் பண்றேன்.. அவர் தயாரா?".. ட்விட்டர் CEO-க்கு சவால் விட்ட எலான் மஸ்க்.. அப்படி என்ன ஆச்சு.. முழு விபரம்..!

EXAM, JEE MAIN 2022, JEE MAIN 2022 RESULTS, STUDENTS, TELANGANA, JEE மெயின் 2022 தேர்வு முடிவுகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்