‘எனக்கு அவருதான் முக்கியம்’!..‘தாத்தாவுக்காக நான் ஜெயிச்ச எம்.பி பதவிய ராஜினாமா செய்றேன்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாத்தாவிற்காக பேரன் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யவிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 28 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த எம்.பி பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதாக வெற்றி பெற்ற வேட்பாளர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது பேரன்களான நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவன்னா உட்பட 8 பேர் தேர்தல் களத்தில் நின்றனர். இதில், தும்கூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வியை தழுவியுள்ளார்.
இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் ஹசன் தொகுதியில் போட்டியிட்ட அவரது பேரன் பிரஜ்வால் ரேவன்னா மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரேவன்னா, எனது தாத்தாவும் தேசிய தலைவருமான தேவகவுடாவிற்கு வழிவிடும் வகையில் எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று அறிவித்துள்ளார்.
மேலும், இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, கட்சியோ, தேவகவுடாவோ இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் இது உணர்ச்சி வசத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்நிலையில், மிக நெடிய அரசியல் அனுபவம் கொண்ட தேவகவுடாவின் இருப்பு பாராளுமன்றத்திற்கு தேவை என்றும் அதனால் தேவகவுடா மீண்டும் ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆக வேண்டும் எனதான் விரும்புவதாக கூறினார்.
இந்நிலையில், கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவன்னாவின் மகனான பிரஜ்வால் ரேவன்னாவின் அரசியல் நுழைவுக்காக, தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த ஹசன் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தும்கூர் தொகுதியில் தேவகவுடா போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஏன் 'பொண்டாட்டி' கூட எனக்கு ஓட்டு போடலியா?'... 'குமுறி குமுறி' அழுத வேட்பாளர்... வைரல் வீடியோ!
- ‘தலைவராக முதல் மக்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்!
- ‘11 மணிநேர காத்திருப்பு’.. ‘எதிர்பாராத முடிவுகள்’.. சோகமாக வெளியேறிய பொன்.ராதாகிருஷ்ணன்!
- “தலை வணக்கம் தமிழகமே”.. பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர்!
- ‘இந்த முறையும் அதை தவறவிட்ட தேமுதிக’.. அனைத்து தொகுதியிலும் பின்னடைவு!
- ‘பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள், உங்களோட சேர்ந்து.... வைரலாகும் பாக்கிஸ்தான் பிரதமரின் ட்விட்’!
- 'அப்போ அவுங்க'... 'இப்போ இவரு'... 'தேசிய அளவில் இடம்பிடித்த தி.மு.க.'!
- எலெக்ஷன் ரிசல்ட்டை கேட்டு காங்கிரஸ் தலைவர் நெஞ்சுவலியில் உயிரிழப்பு..! சோகத்தில் தொண்டர்கள்..!
- கோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..?
- ‘பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்’! .. தொடரும் பதற்றம்!