'இவங்களலலாம் பொதுவெளிக்கு இழுத்துட்டு வந்து'.. பாலியல் குற்றவாளிகளுக்கு ஜெயா பச்சன் பரிந்துரைக்கும் 'பரபரப்பு' தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிக எம்பிக்களும்  குரல் எழுப்பியுள்ளனர். தற்போதைய சூழலில் தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதேபோல் கோவையில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.

இந்நிலையில் இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கோவை பாலியல் குற்றங்களை சுட்டிக் காட்டியதோடு, முன்னதாக கோவையில் 100க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டு அவர்கள் மிரட்டப்பட்டனர்; ஆனால் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீதான தண்டனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் மேற்கொண்டு குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் பெண்கள் இப்படியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொண்டே இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது இருக்கட்டும் என்றும் ஜோதிமணி குறிப்பிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி வில்சன் கொரியா, கலிபோர்னியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்று பாலியல் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை பாதிப்பு அறுவை சிகிச்சை செய்து தண்டனை அளிக்கப்படுவதாகவும், அதுபோன்ற தண்டனைகளை நம் நாட்டிலும் இந்த குற்றவாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை அவர்களது சொத்துக்களை முடக்கி எடுத்துக்கொள்ளவேண்டும், அப்படி பணம் இல்லை என்றால் அந்தந்த மாநிலங்களின் அரச கருவூலத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

மேலும் சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், இது போன்ற குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டில், பொதுவெளியில் நிற்கவைத்து அடித்தும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவது போல் கொல்லப்படவேண்டும் என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் கேட்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்த குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் போதிய அளவில் உள்ளதாகவும், ஆகவே புதிய சட்டங்களை உருவாக்குவதை விட, இருக்கும் சட்டங்களை துணிந்து செயல்படுத்தவும் அதற்கான நிர்வாகத் திறன்களைக் கொண்டு சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட வழிவகை செய்வதுமே இந்த குற்றக் கொடுமைகளைத் தடுப்பதற்கு போதுமானது என்றும் தெரிவித்தார்.

SEXUALABUSE, JAYABACHCHAN, PUNISHRAPISTSINPUBLIC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்