'4 மணி நேரம்'... 'வலியால் கதறிய நிறைமாத 'கர்ப்பிணி'... 'நெகிழ்ந்த பிரதமர்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பனி உறைந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை ராணுவ வீரர்கள் தூக்கி சென்ற வீடியோ பலரையும் நெகிழ செய்துள்ளது.

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் ஷமிமா என்ற இளம் பெண். நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் கதறி துடித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, எந்த வித போக்குவரத்து வசதியோ, சாலை வசதியோ அங்கு இல்லை. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த அந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அங்கு விரைந்த 100க்கும் மேற்பட்ட  ராணுவ வீரர்கள் அந்த பெண்ணை மருத்துவமைக்கு தூக்கி சென்றார்கள்.

4 மணி நேரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்று கர்ப்பிணி ஷமிமாவை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு ஷமிமாவுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ராணுவ வீரர்களின் செயலை பாராட்டி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பகிர்ந்துள்ளார். அதில், '' “நமது ராணுவத்தினர் என்றுமே வீரத்துக்கு தொழில் தர்மத்துக்கும் பெயர் பெற்றவர்கள். நமது ராணுவத்தினரின் மனிதாபிமான குணமும் மரியாதைக்குரியது. எந்த சூழலிலும் மக்களுக்கு உதவி வேண்டுமென்றால் தங்களால் முடிந்த அத்தனையையும் செய்பவர்கள் நமது ராணுவத்தினர். பெருமையாய் உள்ளது. ஷமீமா மற்றும் அவரது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென பிராத்தனை செய்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NARENDRAMODI, INDIANMILITARY, SHAMIMA, ARMY DAY, PREGNANT WOMAN, INDIAN ARMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்