அவரோட அந்த 'தில்லுக்கு' தான் இந்த அன்பளிப்பு...! சொன்னபடியே செய்த 'ஜாவா' நிறுவனம்...! - என்ன மாடல் பைக் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஏப்ரல் 17-ம் தேதி அன்று வாங்கினி ரயில் நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவர் அழைத்துச் சென்ற குழந்தை திடீரென ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. சிறிது தொலைவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
கொஞ்சம் கூட வெயிட் பண்ணாமல் உடனடியாக ரெயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே வேகமாக ஓடிச்சென்று அந்தக் குழந்தையைக் வெளியேற்றினார். ஒரு சின்ன இடைவெளியில் ரயிலில் இருந்து அவரையும் காப்பாற்றிக் கொண்டார்.
இது நடந்த சிசிடிவி காட்சிகள் ஏப்ரல் 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பலரும் மயூர் ஷெல்கேவின் இந்த சாகசத்தை வெகுவாக அனைவரும் பாராட்டினர்.
மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ்கோயலும் அவர் பணியின் மீது காட்டிய அக்கறை வியக்க வைப்பதாக பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்த அவர் பணியாற்றும் ரயில்வே சார்பில் ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு ஷெல்கே கவுரவிக்கப்பட்டார். அந்த 50 ஆயிரம் ரூபாயில் பாதித்தொகையை தண்டவாளத்தில் விழுந்து காப்பாற்றிய குழந்தையின் குடும்பத்துக்கு வழங்கினார். இதன் மூலம் அவர் மேல் மதிப்பு மேலும் பல மடங்கானது.
இந்த நிலையில், மயூர் ஷெல்கேவின் சாகச செயலைப் பாராட்டி ஜாவா நிறுவனம் பைக் பரிசளிப்பதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. அதேபோல் தற்போது புல்லட் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளது. ஜாவாவின் 42 புல்லட்டை பரிசாக கொடுத்துள்ள அந்த நிறுவனம், மயூர் ஷெல்கேவின் தைரியத்தைக் கண்டு ஜாவா நிறுவனம் பெருமை கொள்வதாகவும், அவரின் தைரியத்துக்கும் அர்ப்பணிப்பிற்கும் தான் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் செய்த காரியத்திற்கு தலைவணங்குவதாகவும், அவரின் பெருமை மிகு செயலுக்கு பாராட்டுவதில் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளனர். நொடிப் பொழுது தாமதித்து இருந்தால் கூட குழந்தையின் உயிரை காப்பாற்றியிருப்பது கடினம் என்ற சூழலில் மயூர் ஷெல்கே செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை இந்திய ரயில்வே துறையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன ஒரு மனுஷன்...! 'தன் உயிரையே பணையம் வச்சிருக்காரு...' 'அவருக்காக இதுகூட பண்ணலன்னா எப்படி...' ஜாவா பைக் நிறுவனம் அறிவித்துள்ள 'வாவ்' பரிசு...!
- 'வழக்கம்போல குப்பைய போட வந்திருக்காங்க...' 'திடீர்னு பின்னாடி வந்த ஒரு பைக்...' 'கண் இமைக்குற நேரத்துக்குள்ள...' - நடுங்கி போன பெண்மணி...!
- எனக்கு வேற வழி தெரியலங்க...! 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...!
- நாடு முழுவதும் குறுகிய தூர ரயில் ‘கட்டணம்’ உயர்வு.. என்ன காரணம்..? ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு..!
- ‘பல நாள் தண்ணீர் தான் உணவு’!.. பிள்ளைகளுக்காக ‘பட்டினி’ கிடந்த தாயின் பரிதாப நிலை.. கண்கலங்கிய தாசில்தார்..!
- 'ஒன்லி அந்த பைக் மட்டும் தான் டார்கெட்...' 'வேற எந்த மாடல் பைக்கையும் டச் பண்ணுறது இல்ல...' 'திருட்டுல அப்படி என்ன ethics...? - பகீர் பின்னணி...!
- Video: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!
- 'ஒரு டோஸ் ஊசி 16 கோடி'... 'என்ன டீரா, உன்ன அப்படி விட்டுருவோமா'... 'திரண்ட 16 கோடி'... 'ஆனா, அதிலிருக்கும் சிக்கல்'... விடாமல் போராடும் பெற்றோர்!
- பனிப்புதைவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த மனித கைகள்!.. விசுவாசமான நாயின் ‘சமயோஜிதத்தால்’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!
- 'ஒரு கல்லை மட்டும் ரோட்டுக்கு நடுவுல வச்சிடுவாரு...' 'அடுத்தது எல்லாமே அவர் போட்ட திட்டப்படியே நடக்கும்...' - கடைசியில 'அத' எடுத்திட்டு எஸ்கேப் ஆயிடுவாரு...!