பெரும் சோகம்! புகழ்பெற்ற இந்திய தியேட்டர் ஆர்டிஸ்ட் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்.

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏகோபித்த இந்திய கலைஞர்கள் கொண்டாடும் பிரபல நாடக நடிகையின் மரண சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பழம்பெரும் நாடக நடிகையும் டெல்லி அக்ஷரா தியேட்டரின் இணை நிறுவனருமான ஜலபாலா வைத்யா தற்போது மரணம் அடைந்திருக்கிறார். 86 வயதில் ஜலபாலா வைத்யா அடைந்த இந்த மரணம் இந்திய கலைஞர்கள் பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் வசித்து வந்த ஜலபாலா, அண்மைக்காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக அவரது மகளும் நாடக இயக்குனருமான அனுசுயா வைத்யா ஷெட்டி குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி, 2023 ஏப்ரல் 9-ஆம் தேதி ஜலபாலா வைத்யா காலமானதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

லண்டனில் பிறந்த ஜலபாலா வைத்யாவின் தந்தை பிரபல இந்திய எழுத்தாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுரேஷ் வைத்யா ஆவார். ஜலபாலாவின் தாயார் ஆங்கில பாரம்பரிய பாடகர் பாடகர் மேட்ஜ் ஃபிராங்கீஸ். தொடக்கத்தில் பத்திரிகையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த ஜலபாலா, டெல்லி அரசாங்கத்தின் வரிஷ்ட் சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமியின் தாகூர் விருது, டெல்லி நாட்டிய சங்க விருது, ஆந்திர பிரதேசம் நாட்டிய அகாடமி கவுரவ விருது, அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தின் கவுரவ குடியுரிமை உள்ளிட்ட மதிப்பு மிக்க பல அங்கீகாரங்களை பெற்றார்.

ஜலபாலாவின் வாழ்க்கை, 1968 ஆம் ஆண்டு ஃபுல் சர்க்கிள் நாடகத்தில் தொடங்கியது. பிறகு ஷர்மனுடன் இணைந்து அக்ஷரா நேஷனல் கிளாசிக் தியேட்டரை நிறுவினார்.  சுமார் 20 நாடகங்களின் முக்கிய இடங்களில் நடித்தார் ஜெயபாலா. இவரது நாடகங்களில் "Full Circle", "The Ramayana", "Let's Laugh Again", 'Larflarflarf', "The Bhagavad Gita", "The Cabuliwala", 'Gitanjali', and 'The Strange Case of Billy Biswas" ஆகியவை மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில்தான் டெல்லியில் காலமான இவருக்கு நாடக மற்றும் திரைப்பட பிரபலங்கள், இந்தியா முழுவதும் உள்ள ஊடக மற்றும் ஆவணப்பட கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

JALABALA VAIDYA, RIP JALABALA VAIDYA, AKSHARA THEATRE

மற்ற செய்திகள்