இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை.. சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு கிடைச்ச தாறுமாறான பரிசுத்தொகை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை ஒன்றை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும்படி கோரிக்கை வைத்திருந்த இந்திய மாணவனுக்கு அந்நிறுவனம் 38 லட்ச ரூபாய் சன்மானம் அளித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | இறுதி கணத்தில் அம்மாவின் சவப்பெட்டி மீது அரசர் சார்லஸ் வைத்த கடிதம்.. அதுல இருந்ததை படிச்சிட்டு கண்கலங்கிய பொதுமக்கள்..!

இணைய வசதி பெருக்கத்தின் பலனாக சமூக வலை தளங்களின் வீச்சு மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது. இணையம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவினாலும், அதனை தவறான வழியில் சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களிடம் இருந்து தங்களது பயனர்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னெடுத்துவருகின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா தங்களது இணைய பக்கங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு கணிசமான பரிசுத் தொகையையும் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 38 லட்ச ரூபாயை வழங்கியுள்ளது மெட்டா நிறுவனம். இதற்கு காரணமாக அமைந்தது ஒரு பிழை தான்.

பிழை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவர் நீரஜ் ஷர்மா. இவர் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் ரீல்களின் thumbnails-ஐ எந்த கணக்கிலிருந்தும் தங்கள் லாகின் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடாமல் மாற்ற அனுமதிக்கும் பிழையை கண்டறிந்திருக்கிறார். இதுகுறித்து அந்நிறுவனத்திற்கும் தகவல் அளித்திருக்கிறார் ஷர்மா. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து ஷர்மா புகார் அளிக்க அதனை பரிசோதித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிழை இருப்பதை ஏற்றுக்கொண்டதுடன், ஷர்மாவிற்கு 45,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஷர்மா," கடந்த டிசம்பரில் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பிழையை கண்டறிந்தேன். பின்னர் அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தேன். இறுதியாக ஜனவரி 31 ஆம் தேதி அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் Bug (பிழை) என்பதை தெரிந்துகொண்டேன். பின்னர் இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பினேன். மூன்று நாட்கள் கழித்து பதில் வந்தது. அதில் டெமோ செய்து காட்டுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.

டெமோ

இதனை தொடர்ந்து பிழை இருப்பதை 5 நிமிட டெமோ மூலமாக ஷர்மா விளக்கியுள்ளார். பேஸ்புக் நிர்வாகம் மே 11 ஆம் தேதி இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது. அது மட்டும் அல்லாமல், 45,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 35 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையாகவும் வழங்க முன்வந்தது. மேலும், பரிசுத்தொகையை வழங்க தாமதமானதால் கூடுதலாக 4500 டாலர்களையும் (3 லட்ச ரூபாய்) பேஸ்புக் நிர்வாகம் வழங்கியிருக்கிறது. மொத்தமாக 38 லட்ச ரூபாய் பரிசுத்தொகை ஷர்மாவிற்கு கிடைத்திருக்கிறது.

Also Read | ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஜாகுவார் கார்.. "அட, இதுக்கு பின்னாடி இப்டி ஒரு சம்பவம் இருக்கா??"

JAIPUR, STUDENT, BUGS, INSTAGRAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்