'எவளோ தாராள மனசு பாரேன்'... 'Money Heist வெப் சீரிஸ் பாருங்க'... ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய பிரபல இந்திய நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

Money Heist எனப்படும் ஸ்பெனிஷ் மொழி வெப் சிரீஸின் பாகம் 5 செம்படம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது.

'எவளோ தாராள மனசு பாரேன்'... 'Money Heist வெப் சீரிஸ் பாருங்க'... ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய பிரபல இந்திய நிறுவனம்!

உலக அளவில் புகழ் பெற்ற வெப் சீரீஸில் Money Heist. இதற்கு மொழி மற்றும் நாட்டை தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இதன் 5ம் பாகம் வெளியாக உள்ளது. இது Money Heist ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செம்படம்பர் 3ம் தேதி எப்போது வரும் எனக் காத்திருக்கிறோம் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Jaipur Firm is Giving Its Employees a Netflix and Chill Holiday

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாக வைத்து இயங்கி வரும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் "நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே" என்று பெயரிட்டு அன்று ஊழியர்கள் மொத்தமாக விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனைப் பல இளைஞர்கள் தங்கள் டீம் லீடர் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள் எனச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்