'என்ன சார் பண்ண முடியும்?.. படிச்ச படிப்புக்கு தகுந்த வேல கிடைக்கமா'... முதுகலை பட்டதாரிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா!?
முகப்பு > செய்திகள் > இந்தியாஜெய்ப்பூரில் 1,162 பேர் பிச்சை எடுப்பதாகவும், அதில் 5 பேர் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக நகர போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 1,162 பேர் பிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. அதில் இரண்டு பேர் முதுகலை மற்றும் மூன்று பேர் இளங்கலை பட்டதாரிகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 825 பேர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 1,162 பேரில் 419 பேர் தங்களுக்கு பிச்சை எடுப்பது பிடிக்கவில்லை என கூறியுள்ளனர். தாங்கள் மீண்டும் படிக்க விரும்புவதாக 27 பேர் கூறியுள்ளனர்.
பட்டதாரிகள் ஐந்து பேரும் ராம்னிவாஸ் பாக், வால்ட் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்றனர். அதில் ஒருவர் வர்த்தகத் துறையில் முதுகலை பட்டமும், மற்றொருவர் கலைத்துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். ஐந்து பேரில் இரண்டு பேர் 50 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் இருவர் 32 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவர் மட்டும் 65 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தால் அதனை தொடர அவர்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். வேலை தேடி அலைந்து கிடைக்காததால், சாப்பாட்டுக்கு வேறு வழி இல்லாமல் இதனை செய்ததாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதனை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஜெய்ப்பூரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறை சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
- வாவ், செம கிரியேட்டிவ் JOBS...! 'ஆன்லைன் கேமிங்ல வேலைவாய்ப்புகள், இன்னும் பல...' - நெஞ்சை குளிர வைக்கும் அறிவிப்பு...!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
- 'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...
- 'கொரோனாவால பெரிய அடி'... 'இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!'...
- 'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி!'...
- “இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- 'போதும் பா சாமி!.. இதுக்கு மேல தாங்காது!'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்!.. BPO நிலையும் மோசம்!.. அதிர்ச்சி தகவல்!
- 'அடிக்கு மேல் அடி... மரண அடி!.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'!.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்!
- 'அட போங்கப்பா... நீங்களும் உங்க கொரோனாவும்!.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'?.. நிறுவனங்களின் 'அதிரடி' முடிவால்... திகைத்துப் போன ஊழியர்கள்!