இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தடைவிதிப்பதாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜெயின், குஜராத்தி அமைப்புகள் அறிவித்துள்ளன.

மத்திய பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்தத்தின்போது மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஜெயின், குஜராத்தி அமைப்புகள் தடை விதித்துள்ளது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போபாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய அந்த அமைப்புகளின் தலைவர்கள், “நிச்சயத்திற்குப் பிறகு சில திருமணங்கள் நடைபெறாமல் போகும்போது, முன்னர் எடுத்த புகைப்படத்தால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்துடன் திருமணத்தின்போது பெண்களுக்கு நடனமாட கற்றுத் தருவதற்காக ஆண் நடனக் கலைஞர்கள் நிகழ்சிக்கு வருவதும், திருமண ஊர்வலத்தின்போது இரு வீட்டைச் சேர்ந்த பெண்கள் நடனமாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை தனிமனித சுதந்திரத்தை தடுக்கும் விதமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

MADHYA PRADESH, WEDDING, PHOTOSHOOT, PREWEDDING, COUPLE, BAN, JAIN, GUJARATI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்