‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..! மாஸ் காட்டிய ஜெகன்மோகன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசுப்பணிக்கான தேர்வில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தியுள்ளார்.

ஆந்திர முதல்வராக பதிவு ஏற்ற 100 நாட்களுக்குள் ரேஷன் பொருள்களை வீட்டுக்கு கொண்டுவரும் திட்டம், மதுக்கடைகளை குறைக்கும் திட்டம், ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு நிதிஉதவி, விவசாயிகளுக்கு நிதிஉதவி என பல திட்டங்களை அமல்படுத்தி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி காட்டி வருகிறார். சமீபத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேருக்கு அரசுப்பணி வழங்கி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்நிலையில் ஆந்திர அரசுப்பணிக்கான ஏபிபிஎஸ்சி (APPSC) தேர்வுகளில் நேர்முக தேர்வை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் வரும் 2020-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு வேலைக்கு செல்பவர்கள் நேர்காணலுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை என்றும், மதிப்பெண்களின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. அரசு வேலைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

JAGANMOHANREDDY, INTERVIEWS, JOBS, APPSC, PUBLICSERVICECOMMISSION, ANDHRAPRADESH, YSJAGAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்