'நான் தெலுங்கானாவின் மகள்'...'அண்ணன் ஜெகனுக்கு டஃப் கொடுப்பாரா ஷர்மிளா?'... ஆரம்பமே அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானாவில் தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரின் மகள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியைத் துவங்கத் தீர்மானித்துள்ளார். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்துள்ளது தெலங்கானாவில் சந்திரசேகர ராவை எதிர்த்து என்பது தான் இங்குக் கவனிக்கத்தக்க ஒன்று.

இருப்பினும் அண்ணன் ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே ஷர்மிளா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஆந்திர  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், 'அண்ணனை எதிர்க்க வேண்டாம்' என்றே தெலங்கானாவில் கவனம் செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படியே அவரின் பேச்சும் அமைந்தது.

2023 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் தனது சொந்த அரசியல் கட்சியை உருவாக்கி, ஷர்மிளா தெலங்கானா அரசியலில் இறங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், தெலங்கானாவின் கம்மம் பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடத்தி, அவர் அதில் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவார் எனப் பேசப்பட்டது.

இதற்கிடையே, கட்சி தொடங்கும் முன்பாகவே எதிர்ப்புகளைச் சம்பாதித்தார். அவரின் கூட்டத்துக்கு ஆளும் தெலங்கானா தடைகள் பல விதித்தாக கூறப்படுகிறது. இதனிடையே கம்மத்தில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில், தான் அரசியலில் நுழைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷர்மிளா, ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் தனது சொந்தக் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இதனிடையே பொதுக்கூட்டத்தில் பல விஷயங்கள் பெரும் கவனம் ஈர்த்தது. அது ஷர்மிளா தனது கையில் கட்டியிருந்த கடிகாரம். கருப்பு பட்டையுடன் கூடிய பழைய பாணியிலான மணிக்கட்டு கடிகாரமான அது, அவரின் தந்தை ராஜசேகர ரெட்டி கட்டியிருந்தது. சென்டிமென்ட் அடிப்படையில் அவர் அதைக் கட்டியிருந்தார். இதேபோல் தெலங்கானா பெண்கள் மட்டுமே உடுத்தும் பிரத்தியேக டைப்பிலான சேலையையும் அணிந்து வந்து கவனம் ஈர்த்தார் ஷர்மிளா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்