'அண்ணனோடு சண்டையா'?... 'புதிய அவதாரம் எடுக்கப் போகும் ஜெகனின் தங்கை'... பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவின் முன்னாள் முதல்வரின் மகள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்ஷர்மிளா எடுத்துள்ள முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரின் மகள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகள் ஒய்.எஸ்ஷர்மிளாவிற்கு அரசியல் என்பது புதியது அல்ல. ஒய்.எஸ்.ராஜசேகர் இறந்த தருணத்தில் 2012-ல் ஜெகன் அரசியலில் தீவிரமாக இருந்த தருணம். அப்போது, சொத்து வழக்கில் ஜெகனை 2012-ல் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. ஜெகன் சிறைக்கு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாவட்டத்தில் ஸ்ரீகாகுளத்தின் வடக்கு கடற்கரையில் நடந்த முதல் கூட்டத்தில்தான் ஷர்மிளாவின் அரசியல் பயணம் தொடங்கியது.

அண்ணன் ஜெகன் இல்லாத நிலையில் கட்சியை மேம்படுத்தத் தாயுடன் சேர்ந்து அரசியலில் முழுவதுமாக அடியெடுத்து வைத்தார் ஷர்மிளா. ஜெகன் சிறையிலிருந்த போது அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒரு பாதயாத்திரையை நடத்தியிருந்தார். அன்று முதல் இப்போது வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முக்கிய நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஷர்மிளா தனது குடும்பத்தினரிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்க இருக்கிறார் என்று ஆந்திர மாநில ஊடகங்கள் கூறி வந்தன. அதனை மெய்ப்பிக்கும் விதமாக அவர் புதிய கட்சி ஆரம்பிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அண்ணனை எதிர்க்க வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்காக தெலங்கானாவில் தனது கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒய்.எஸ்.ஆர் குடும்ப இல்லமான லோட்டஸ் பாண்டில் உள்ள தனது இல்லத்தில் தனது தந்தையின் விசுவாசிகளைச் சந்தித்து ஆலோசித்தார்.

இந்தக் கூட்டத்தில் புதிய கட்சி குறித்து ஷர்மிளா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தெலங்கானாவில் 'ராஜண்ணா ராஜ்யம்' (ஒய்.எஸ்.ஆரின் ஆட்சி) கொண்டுவருவேன். தெலங்கானாவில் தற்போது நல்ல அரசு அமையவில்லை. மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி கனவு கண்ட நல்ல அரசான ராஜண்ணா ராஜ்யத்தை ஏன் கொண்டு வர முடியாது? ராஜண்ணா ராஜ்யத்தை தெலங்கானாவிலும் கொண்டுவர நாங்கள் பாடுபடுவோம்'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்