'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்த நாட்டிலைக் காட்டிலும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் முதன்முதலில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. ஏனெனில், அங்கு சுவாசக் கோளாறு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் அதிகம் வசித்து வருவதால், அங்கு நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி இடுகாடுகள் நிரம்பி வழிந்தன.
இதையடுத்து கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 18-ம் தேதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தநிலையில், தற்போது வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. 6 வாரங்களுக்குப்பிறகு, பலி எண்ணிக்கை மற்றும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வருவதால் மே 4-ம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார்.
கட்டுமானத்துறை, உற்பத்தி துறை மற்றும் மொத்த விற்பனையகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பார்கள், உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால் அங்கேயே அருந்த அனுமதி இல்லை. பார்சல் வாங்கி வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். அந்தந்த பிராந்தியங்களுக்குள் மக்கள் பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து பயணிக்கலாம். இறுதிச்சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆனால், அதிகபட்சம் 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் கூறி உள்ளார்.
இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 644 ஆக உள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பு குறைவதால் லாக் டவுனை நீக்க முடிவு செய்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'
- பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?
- ‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!
- வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- 10 லட்சத்தை 'நெருங்கும்' பாதிப்பு... 'வரலாறு' காணாத உயிரிழப்புக்கு நடுவே... ஊரடங்கை மீறி கடற்கரையில் 'குவிந்த' மக்கள்...