‘எண்ணி முடிக்கவே பல மணிநேரம் ஆச்சு’.. தோண்ட, தோண்ட கட்டுக்கட்டாக பணம், வெள்ளி.. IT ரெய்டில் அதிகாரிகளை அதிரவைத்த தொழிலதிபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நகைக்கடை தொழிலதிபருக்கு சொந்தமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சாமுண்டா புல்லியன். இவர் சாமுண்டா என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த ​​2019-20 நிதியாண்டில் இவரது கடையின் லாபம் ரூ.22.83 லட்சம் என இருந்துள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2020-21 நிதியாண்டில் அவரது லாபம் ரூ.652 கோடியாக திடீரென அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து 2021-22 நிதியாண்டில் அவரது மொத்த வருவாய் ரூ.1764 கோடியை எட்டியது.

இது அம்மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வருமான வரித்துறையிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சாமுண்டா புல்லியனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நீட்டித்த இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்படி சாமுண்டாவுக்கு சொந்தமான அலுவலகம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டபோது, தரையில் மறைத்து வைக்கப்பட்ட பணத்தைக் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அலுவலகத்தின் தரை மற்றும் சுவர்களின் ஒரு பகுதி சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது. இதனை அடுத்து அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் இடித்துள்ளனர். அப்போது அங்கு ரூ.9.78 கோடி ரொக்கமும், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளி செங்கற்கள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போய்விட்டனர்.

இந்த ரொக்கம் மற்றும் வெள்ளி இங்கு இருப்பது தங்களுக்கே தெரியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்த அலுவலகத்தை சீல் வைத்தனர். அங்குக் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க மட்டும் சுமார் 6 மணி நேரம் ஆகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைதை தவிர்க்கத் தொழிலதிபர் சாமுண்டா புல்லியன், மும்பை செஷன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், அவரை விசாரணைக்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

MUMBAI, ITRAID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்