'முகத்தை மூடாமல் வெளியில் போய் வைரஸை பரப்புவோம்...' 'பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட ஐ டி ஊழியர்...' விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அனைவரும் வெளியே செல்வோம் வைரஸை பரப்புவோம் என முகநூலில் அழைப்பு விடுத்த ஐ டி ஊழியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் கொரோனா வைரசால் அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் காணப்படுகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 987 நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழுந்துள்ள நிலையில் 84 பேர் சிகிச்சை பெற்று நலமாக உள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருபவர் முஜீப் முகமது (25). இந்த கடுமையான காலகட்டத்தில், முஜீப் முகமது தனது பேஸ்புக் பக்கத்தில், ''கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்குச் சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸை பரப்புவோம்'' என பதிவிட்டுள்ளார்.

முஜீப் முகமது இந்த செயலை அறிந்த இன்போசிஸ் உடனடியாக அவரை பணிநீக்கம் செய்தது. மேலும் "எங்கள்  ஊழியரின் இந்த பேஸ்புக் பதிவு, சமூக நலனுக்கு முரணாகவும், நல்நடத்தை நெறிமுறைகளுக்கும் எதிரானது. இது போன்ற செயல்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் சிறிதும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதனால் அந்த ஊழியரை நாங்கள் பணிநீக்கம் செய்துள்ளோம்” என்ற அறிக்கையை வெளியிட்டது.

இந்த செயலை அறிந்த பெங்களூர் காவல்துறை உடனடியாக உடனடியாக முஜீப் முகமதுவை கைது செய்துள்ளனர். மேலும் இதுபற்றி“தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை மேலும் பரப்ப வேண்டும் என்று சர்ச்சைக்குரிய, சமூக பொறுப்பற்ற வகையில் பதிவிட்ட இளைஞர் முஜீப் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று  இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

SOFTWAREENGINEER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்