"உங்க வேலை நேரம் முடிஞ்சுச்சு.. கிளம்புங்க” .. தானா ஷட் அவுன் ஆகும் கம்யூட்டர்கள்.. ஊழியர்கள் நலன் கருதி ஐடி கம்பெனி வைரல் முன்னெடுப்பு.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் பல நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்ற சூழல் இருந்தாலும், சில நேரங்களில் ஒன்று, இரண்டு மணி நேரம் அதிக வேலை இருக்கத்தான் செய்யும்.

                             Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

அதிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் போது ஊழியர்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு பணிபுரியவும் செய்வார்கள்.

அப்படி இருக்கையில் ஒரு பிரபல ஐடி நிறுவனம் ஒன்று தற்போது எடுத்துள்ள முன்னெடுப்பு தொடர்பான செய்தி, இணைவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று, அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கணினியில் ரிமைண்டர் மெசேஜ் ஒன்றை அனுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதில், "உங்கள் பணி நேரம் முடிந்தது. ஆஃபிஸ் சிஸ்டம் பத்து நிமிடங்களில் ஷட் டவுன் ஆகி விடும். தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள்" என மெசேஜ் ஒன்று ஊழியர்கள் திரையில் காண்பிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்ய முயற்சித்தால் கூட செய்ய முடியாது என்ற சூழல் உள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் புகைப்படங்களுடன் லிங்க்டு இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது நிறுவனம் ஒர்க் லைஃப் பேலன்ஸை ஆதரிக்கிறது என்றும் வேலை நேரம் முடிந்த பிறகு சிஸ்டமை ஆஃப் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, விடுமுறை தினங்களில் பணி நேரம் முடிந்த பின்னர் ஆபீஸ் சம்பந்தமான எந்த போன் கால், மெசேஜ்கள், மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிக்க வேண்டாம் என நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

ஒரு ஐடி நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள சூழலில், பிற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கூட இதனை வியப்புடன் குறிப்பிட்டு அந்த நிறுவனம் பற்றி கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

IT COMPANY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்