'சென்னையிலிருந்து கால் பண்ணுன மனைவி'...'உள்ள போனா ஒரே ரத்தம்'...'இஸ்ரோ விஞ்ஞானிக்கு' நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணியாற்றி வருபவர் விஞ்ஞானி எஸ். சுரேஷ். கேரளாவை பூர்விகமாக சுரேஷிற்கு, திருமணமாகி இந்திரா மனைவியும் இரண்டுகுழந்தைகளும் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும் மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹைதராபாத் நகரில் சுரேஷ் பணியாற்றி வந்துள்ளார். வங்கி ஊழியரான அவரது மனைவிக்கு வந்த பணியிட மாற்றம் காரணமாக, அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

இதனிடையே சுரேஷ் நேற்று பணிக்கு செல்லாத நிலையில், அவரது அலுவலக நண்பர்கள் அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவரது மனைவிடம் விவரத்தை கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சென்னையில் இருந்த அவரது மனைவி இந்திரா, கணவர் சுரேஷை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதனால் பதறி போன அவர், உடனடியாக  ஹைதராபாத் விரைந்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை உதவியுடன் சுரேஷின் வீட்டிற்கு சென்ற இந்திரா, அவர்களது உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். அப்போது அங்கு கண்ட காட்சி இந்திராவை அதிரச் செய்தது. வீட்டின் உள்ளே விஞ்ஞானி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பேசிய காவல்துறை அதிகாரிகள் '' விஞ்ஞானி சுரேஷ் தலையில் கனமான பொருளால் தாக்கிய தடயம் கிடைத்துள்ளது. மேலும் அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்பு தான் விஞ்ஞானி சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும்'' என கூறியுள்ளார்கள்.

இதற்கிடையே இஸ்ரோ விஞ்ஞானி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

MURDER, KILLED, ISRO, NATIONAL REMOTE SENSING CENTRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்