'ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்'... 'ஆனா ஒரே ஒரு வீடியோவுக்கு குவிந்த லட்சங்கள்'... வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்தவர் ஐசக் முண்டா. 35 வயதான இவருக்குத் திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தினக்கூலியாக வேலை பார்த்து வந்த முண்டாவிற்குச் சொற்ப வருமானத்தையே ஈட்டி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாக ஐசக் முண்டாவின் தினசரி வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துள்ளார்.

இதையடுத்து கடந்தாண்டு ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினார். அதில் அதிகம் சைட் டிஷ் எதுவும் இல்லாமல் தான் அரிசிச் சாதம் சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து தனது ஐசன் முண்டா ஈட்டிங் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டார். எதேச்சையாக இந்த வீடியோவை போட்டவருக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது. இதன் பின்னர் பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களில் சமையல், கலாச்சாரம் போன்றவற்றை வீடியோவாக எடுத்துப் போடச் சக்கை போடு போட்டு அனைத்து வீடியோக்களும் ஹிட் அடித்தது. முதல் வீடியோவுக்கு ரூ 37000 அவருக்கு கிடைத்தது. பின்னர் லட்சக்கணக்கில் வருமானம் வர தொடங்கியுள்ளது.

ஐசக் கூறுகையில், நான் ஏழாம் வகுப்பு தான் படித்துள்ளேன், என் சமுதாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிடத் தொடங்கி இப்போது என் சேனல் பிரபலமாகி உள்ளது. இதுவரை 250 வீடியோ போட்டுள்ளேன், என் சேனலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான subscribers உள்ளனர் எனக் கூறியுள்ளார். சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தச் சிரமப்பட்ட ஐசக் முண்டாவின் வாழ்க்கை தற்போது அடியோடு மாறியுள்ளது.

மற்ற செய்திகள்