‘நிழல் உலக’ தாதா தாவூத் இப்ராஹிமின் ’புதிய காதலி’ இவரா?.. ‘யார் இந்த நடிகை?’.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1993 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் உட்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

இதனிடையே தாவூத் இப்ராகிமை இந்தியா, தங்களிடம் ஒப்படைக்கவே வில்லை என்றும் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லவே இல்லை என்றும் உறுதியாக மறுத்து வந்துகொண்டிருந்த பாகிஸ்தான், தற்போது தாவூத் இப்ராகிம் கராச்சியில் ஆடம்பரமான பகுதியில், அரண்மனை ஒன்றில் வசித்து வருவதாக துல்லியமான முகவரியுடன் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் திரைப்படத்துறையில் உள்ள பல நடிகைகளுடன் அவர் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது தகவல்கள் கூடுதலாக வெளியாகியுள்ளன . சினிமாத்துறைக்கும் நிழல் உலகத்திற்கும் உள்ள தொடர்பின் காரணமாக பாகிஸ்தான் திரையுலக நடிகை, 37 வயதான மெஹ்விஷ் ஹயாத் என்பவருடன் தாவூத் இப்ராஹிம் 2019ல் இருந்து உறவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அறியப்பட்ட முகம் அல்ல இவர் என்றாலும் இப்போது பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் பிரபலமான முகமாக மெஹ்விஷ் ஹயாத் மாறியுள்ளார். முன்னதாக இவருக்கு கௌரவ விருது வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு குறித்து பெரிய சர்ச்சை எழுந்தது.  பல்வேறு கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களுடனான நெருக்கம் காரணமாக பல புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகளை மெஹ்விஷ் ஹயாத் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்