'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டி மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்தி வரும் நிலையில், கண்கள் மூலம் கூட வைரஸ் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அடிக்கடி கை, கால்களை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் எனவும், பொது இடங்களில் செல்லும் போது சமூக விலகலை கடைபிடிக்கவும், முகக் கவசங்களை அணிந்து செல்லவும் அரசு வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் செல்வது பெரிதாக பயனளிக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஒரு அறையினுள் பயன்படுவதை விட குறைவான அளவே முகக்கவசங்கள் திறந்தவெளிகளில் பயன்படுகின்றன. இருமல், தும்மலில் உருவாகும் நீர்த்திவலைகளை முகக்கவசங்கள் தடுத்து விடும். ஆனால் காற்று நீர்த்திவலைகள் முகக்கவசம் வழியாக எளிதில் நுழைந்து விடும் என்கின்றனர்.
மேலும், முகக்கவசங்கள் ஈரமாகிவிட்டால் உடனே அதனை மாற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணியும்போது மூக்கு, வாய் ஆகியவற்றை சேர்ந்து மூடியிருப்பது போன்று அணிய வேண்டும் எனவும் மருத்துவ துறையினர் அறிவுறுத்துகின்றனர். முகக்கவசம் அணியும் பொது அதனை நேராக அணிய வேண்டும். கோணலாக அணிந்து கொண்டு அடிக்கடி அதனை சரிசெய்தால் கை முகத்தில் பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன கொஞ்சம் கூட கேப் இல்ல' ... டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்ணுங்க பா ... கொரோனாவை பொருட்படுத்தாத இளைஞர்கள்!
- ஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...
- வீட்டைச் சுற்றி 'வேப்பிலை', 'மஞ்சள்' ... 'கொரோனாவ ஒண்ணும் பண்ணாது', இருந்தாலும் ... புதிய முயற்சியை கையிலெடுத்த கரூர் பெண்கள்!
- வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
- 'கடைசி 24 மணி நேரத்துல யாரும் பாதிக்கப்படல' ... இனி தான் கேர்புல்லா இருக்கணும் ... டெல்லி முதல்வரின் லேட்டஸ்ட் அப்டேட்!
- 'அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்' ... நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ள பிரதமர் ... மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு?
- வரியா, 'சோப் போட்டு கை கழுவ ரெடியா' ... ஆடல் பாடலுடன் கொரோனா விழிப்புணர்வு ... அசத்திய தீயணைப்பு படையினர்!
- 'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
- 'புதுக்கோட்டை' மாணவ மணிகளே ... வீட்ல போர் அடிக்குதா, இந்த சான்ஸ் உங்களுக்கு தான் ... புதுகோட்டை கலெக்டரின் சூப்பர் முயற்சி!
- அடுத்த 'பத்து நாட்கள்' தமிழக எல்லைகளுக்கு சீல் ... அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி ... கொரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிக்கை