வரும் தேர்தலில்... 'ஆன்லைன்'ல ஓட்டு போட முடியுமா?.. எப்போது?.. எப்படி?.. தேர்தல் ஆணையம் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்து வாக்களிக்க உதவலாம் என்று ஏற்கனவே முன்மொழியப்பட்டது.
மேலும் ஓ.டி.பி., லிங்க் அல்லது மெயில் போன்றவற்றை அனுப்பி இணையம் வழியில் வாக்களிக்க வழிவகை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.
அதில் இணைய வழியில் மின்னணு முறையில் வாக்களிக்கும் முறை இறுதி பரிந்துரையாக சட்டத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடைபெறும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என கூறி உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணைய முறையில் வாக்களிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் வெளிநாட்டில் வாழ்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரஜினி கேட்டுக்கொண்டால்’... ‘நான் ஏற்க தயார்’... ‘கமல்ஹாசன் அதிரடி பதில்’...!!!
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’.. கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இதுதானா..? எகிறும் எதிர்பார்ப்பு..!
- "ஈகோவை விட்டுக் கொடுக்க தயார்!".. கமல் அதிரடி!.. ஓகே சொல்வாரா ரஜினி?.. உருவாகிறதா 'ஸ்டார்' கூட்டணி?
- ரஜினிகாந்தின் புதிய கட்சியின் ‘பெயர்’ இதுதானா..? வெளியான பரபரப்பு தகவல்.. அப்போ ‘சின்னம்’ என்ன..?
- ‘அதே தரம்.. அதே நம்பிக்கை!’.. கோல்டு வின்னர் குடும்பத்தின் எல்டியா தூய தேங்காய் எண்ணெய்!
- ஆன்லைன் வகுப்புக்காக மகளிடம் செல்போனை கொடுத்த தந்தை... 'என்ன இது... நம்பவே முடியல!'.. அப்பாவுக்கு ஆப்பு வைத்த மகள்!.. தரமான சம்பவம்!
- “இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!
- சின்னப் பசங்கள விடாதீங்க... ஆன்லைன் கேம்ஸ்-இல் அதிரடி விதிகள்!.. என்ன காரணம்?.. இனிமே கேம்ஸ் வெறும் பொழுதுபோக்கு இல்ல... அதுக்கும் மேல!!
- 10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..!
- ஆன்லைனில் 'உணவு' ஆர்டர் செய்த 'சிறுமி'... ஒரே ஒரு ஆர்டருக்காக... 'வீட்டு' வாசலில் வந்து நின்ற '40'க்கும் மேற்பட்ட 'ஊழியர்'கள்... நடந்தது என்ன??