"இந்திய உணவில் அதிக கொழுப்பு".. நிதி ஆயோக் தந்த ஷாக் ரிப்போர்ட்.. சர்க்கரை & உப்புக்கு வரி விதிக்கப்படுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வாழும் மக்கள் பழக்க வழக்கம், உடை போன்ற பலவற்றை தங்களது கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றனர். இந்த மாற்றங்கள் தான் பல நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக் காரணமாக அமைகிறது. அதில் முக்கியமானது, உணவு பழக்க வழக்கம். தற்போது நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) 2019-20ன் படி, பருமனான பெண்களின் சதவீதம் 2015-16ல் 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 18.4 சதவீதமாக இருந்த ஆண்களின் சதவீதம் தற்போது 22.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. குழந்தை பெறும் தாய்மார்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகளவில் ஏற்படுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகமாகும் பட்சத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அதிகரித்து வரும் உடல் பருமனை சமாளிக்க நிதி ஆயோக் அமைப்பு சில திட்டங்களை முயற்சித்துள்ளது. இதற்கென்று வல்லுநர் குழு ஒன்றை நிதி ஆயோக் அமைத்துள்ளது.
இந்த குழு நடத்திய ஆய்வின் விளைவாக விளைவாக, 2021- 202 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் துரித உணவுகளின் மேல் அதிகம் நாட்டம் காட்டுவதன் விளைவு தான் உடல் பருமன். எனவே இதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு அதிக வரி விதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனால் இத்தகைய உணவு பொருள்களின் விலையும் உயரும் என்பதால் மக்கள் உபயோகிக்க சற்று யோசிப்பார்கள். எனவே இதனால் மக்கள் தொகையில், உடல் பருமன் அதிகரித்து வருவதை சமாளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொட்டலங்களின் முன் பகுதியிலேயே இதுகுறித்து லேபிள் ஒட்டப்படுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
புஜியாக்கள், காய்கறி சிப்ஸ் மற்றும் சிற்றுண்டி உணவுகளுக்கு 5 சதவீத ஜிஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக், IEG மற்றும் PHFI உடன் இணைந்து, எச்எஃப்எஸ்எஸ் உணவுப்பொட்டலங்களின் முன்பக்கத்தில் உப்பு, சர்க்கரை அளவுகுறித்து லேபிளிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி கொழுப்புகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரங்களை மதிப்பாய்வு செய்ததோடு, நிதிஆயோக் 2021-22 ஆண்டறிக்கையில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 17 வயசுலயே மில்லியனர் ஆகிட்டேன்.. இனி பில்லியனர் ஆகுறதுதான் ஒரே டார்கெட்.. திரும்பிப் பார்க்க வச்ச இளைஞர்..!
- ஒருநாள் போட்டியில் முதல் இந்திய பேட்ஸ்மேன்.. ரோஹித் செய்ய இருக்கும் சம்பவம் என்னன்னு தெரியுமா?
- 7 வருஷமா மனைவியின் சமையலில் மறைந்திருந்த ரகசியம்.. கிச்சனில் கேமரா மாட்டிய கணவனுக்கு.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை
- அடேங்கப்பா எவ்ளோ பெரிசு..! Food lovers-க்கு ‘செம’ சான்ஸ்.. இந்த தோசையை சாப்பிட்டா ‘பரிசு’ எவ்ளோ தெரியுமா..?
- "என் பெயரைக் கேட்டாலே எல்லோரும் தெறிச்சு ஓடுறாங்க..ஆனா எனக்கு பழகிடுச்சு" - வைரலாகும் இந்தியரின் வித்தியாசமான பெயர்..!
- Food ஆர்டர் செய்த கஸ்டமர் எழுதிய வாசகம்.. மின்னல் வேகத்தில் பறந்த டெலிவரி மேன்.. அப்படி என்ன ‘எழுதி’ இருந்தார் தெரியுமா..?
- VIDEO: சாப்பிட 'என்ன' இருக்கு...? 'எனக்கும் பசிக்கும்ல...' - ஜன்னல் வழியா 'கிச்சன்'ல புகுந்து செய்த சேட்டை...!
- நைட் 1 மணி.. ‘ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பெண்’.. யாருங்க இவங்க..? வைரலாகும் போட்டோ..!
- தக்காளி இல்லாம செய்யும் ரெசிபிகள்.. இத்தனை இருக்கா..?
- ப்ளீஸ், கொஞ்சம் 'கம்மியா' சாப்பிடுங்க...! 'அதிகமா சாப்பிட்டா நிலைமை கைமீறி போயிடும்...' 'சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்...' - குண்டை தூக்கி போட்ட கிம்...!