‘அது உங்க ஹிஸ்டரி, அத முதல்ல டெலிட் பண்ணுங்க..’ புகார் கூறியவருக்கு ‘நச் ரிப்ளை அளித்த ஐஆர்சிடிசி..’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்பில் வரும் விளம்பரங்கள் பற்றி புகார் செய்தவருக்கு ஐஆர்சிடிசி அளித்துள்ள நச் பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜார்கண்டைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் ஐஆர்சிடிசி ஆப்பில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போது பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரங்கள் வந்துள்ளன. இதனால் எரிச்சலடைந்த அவர் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில், “ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங் ஆப்பில் தோன்றும் மோசமான விளம்பரங்கள் எரிச்சலூட்டுகிறது” எனக் கூறி அதில் மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஐஆர்சிடிசியையும் டேக் செய்துள்ளார்.

இதற்கு ஐஆர்சிடிசி அளித்துள்ள பதிலில், “ஐஆர்சிடிசி விளம்பரங்களை வழங்குவதற்கு கூகுள் விளம்பர சேவையைப் பயன்படுத்துகிறது. இதில் பயனாளர்களின் பிரௌசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கீஸைப் பொறுத்தே விளம்பரங்கள் வரும். எனவே உங்கள் பிரௌசர் ஹிஸ்டரியை டெலிட் செய்யுங்கள். அப்போதுதான் இந்த விளம்பரங்கள் வருவதைத் தடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசியின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

IRCTC, SAVAGE, REPLYTWEET

மற்ற செய்திகள்