“EMI-ஐ தள்ளிப்போடணும்.. இப்ப வந்த OTP நம்பர சொல்லுங்க?”.. கிளம்பும் சைபர் ஃப்ராடுகள்... அலெர்ட் பண்ணிய ஐபிஎஸ் ரூபா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இ.எம்.ஐ-யை தள்ளிப்போடுவதாகச் சொல்லி போன் செய்து பணத்தை திருட காத்திருக்கிறார்கள் என்று ரூபா ஐபிஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் ஐஜிபியாகவும் முன்னாள் சிறைத்துறை டிஐஜியாகவும் இருந்தவர் ரூபா ஐபிஎஸ். அவர் தற்போது புதிய வகையிலான சைபர் குற்றவாளிகள் கிளம்பி வருவதாகவும், அவர்கள் தற்கால சூழலை பயன்படுத்தி இ.எம்.ஐ கொள்ளைகளில் நூதன முறைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸால் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்துவரும் வேலையில், வங்கிகளில் கட்ட வேண்டிய வட்டித்தொகை, இ.எம்.ஐ பணம் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு சில அவகாச சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வகையான சைபர் குற்றவாளிகள், போன் பண்ணி ‘உங்களது இ.எம்.ஐ-ய தள்ளிப்போட வேண்டும். அதற்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது சம்மந்தமாக ஒரு ஓடிபி நம்பர் உங்களுக்கு வந்திருக்கும், அதை தயவு செய்து கூறுங்கள்’ என்று கேட்பார்கள் என்றும் அந்த ஓடிபி நம்பரை கொடுத்தால் போதும் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அந்த சைபர் குற்றவாளிகள் துடைத்து எடுத்துவிடுவார்கள் என்றும்

ரூபா ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்