"எல்லாம் மொபைல் படுத்துறபாடு"..டிராபிக் சிக்னலில் இளைஞர்கள் செஞ்ச காரியம்...ஐபிஎஸ் அதிகாரி ஷேர் செஞ்ச வீடியோ வைரல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிராபிக் நின்று புகைப்படம் எடுக்கும் இரண்டு இளைஞர்களின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | Breaking: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு 1 ஆண்டு சிறை.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
ஐபிஎஸ் ஆபிசர்
சட்டிஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இருக்கிறார் திபான்ஷு காப்ரா. இவர் புதன்கிழமை (நேற்று) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் டிராபிக் சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. அப்போது, போக்குவரத்து அதிகாரி அமரும் கூண்டில் நின்றபடி இரு இளைஞர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.
கூண்டிற்குள் நின்றபடி ஒருவர் போஸ் கொடுக்க, அவரது நண்பர் அவரை புகைப்படம் எடுக்கிறார். அதன் பிறகு, இவர் கூண்டில் ஏறி நிற்க, அவர் புகைப்படம் எடுக்கிறார். இதனை காருக்குள் இருந்தபடி ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு காப்ரா வீடியோ எடுத்திருக்கிறார்.
வைரல் வீடியோ
திபான்ஷு காப்ரா எடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே இளைய தலைமுறையினரிடத்தில் மொபைல் போன் உபயோகம் அதிகமாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். பெருகிவிட்ட இணைய வசதியும், மொபைல் போன்களின் பயன்பாடும் இளைய சமுதாயத்தை திசை திருப்பிவிடும் என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. இந்த நிலையில் போக்குவரத்து காவலர் அமரும் இடத்தில் நின்றபடி இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த சிக்னல் எங்கே அமைந்துள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பல்வேறு மக்களும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க மக்களிடையே இருக்கும் ஆர்வம் இத்தகைய அத்துமீறலை நிகழ்த்த அவர்களை தூண்டுவதாக நெட்டிசன்கள் இந்த பதிவில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
போக்குவரத்து அதிகாரிகளுக்கான பகுதியில் நின்றபடி மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இரு இளைஞர்களின் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு காப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
மொத்த வாழ்க்கையும் இவ்வளவுதாங்க..ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச போட்டோ.. ரொம்ப சிம்பிளா சொல்லிட்டாரே..!
தொடர்புடைய செய்திகள்
- கல்யாண வீட்டில் சொந்தக்காரருடன் செல்ஃபி எடுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. கோவையில் அதிர்ச்சி..!
- ‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!
- “இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!
- கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் கழுத்த பிடித்து செல்பி.. ரசிகரின் செயலால் அதிர்ந்த ஸ்டேடியம்... வைரல் வீடியோ..!
- போன வருஷம் பரம எதிரி.. ஆனா, இந்த தடவ சீனே வேற.. ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..
- அதிகாலை 2.45 க்கு சைக்கிள்ல ரோந்து போன IPS அதிகாரி.. சென்னையை கலக்கும் சிங்கப் பெண்.. டிவிட்டரில் முதல்வர் சொன்ன விஷயம்..!
- "சார்.. உங்க Bag-அ செக் பண்ணணும்".. கம்பீரமான IPS ஆபிசர்.. ஆனா கொழந்த மனசுப்பா இவருக்கு.. ஏர்போர்ட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்..
- "இந்தா மச்சான் சீர்".. வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள்.. நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை..!
- "நைட் 2 பேரும் ஆட்டோல போனாங்க" .. சென்னையில் நண்பர்களுக்கு நடந்த பதற வைக்கும் சம்பவம்..!
- "ஒன்லி அந்த பைக் மட்டும்தான் டார்கெட்"..போலீசை மிரள வைத்த 3 திருடர்கள்..!