'காக்கி சட்டைக்கு குட்பை'... 'கர்நாடகா'வை கலக்கிய 'தமிழ் சிங்கம்'... அதிர்ச்சியில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவில் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளில் அதிரடியாகவும் நேர்மையாகவும் செயல்பட்டவர் அண்ணமாலை.கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்,கடந்த 2011ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் தேர்ச்சி பெற்று கர்நாடகாவில் பணியில் சேர்ந்தார். கர்கலா பகுதியின் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், உடுப்பி, சிக்மகளூர் ஆகிய இடங்களில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

உடுப்பியில் இருந்து பணி மாற்றம் செய்த போது அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள்.அவர் பணியாற்றிய இடத்தில் எல்லாம் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.நேர்மையாகவும் அதிரடியாகவும் செயல்பட அண்ணாமலையை, சிங்கம் என கர்நாடக மக்கள் அழைத்தார்கள்.இதனிடையே காவல்துறை பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக அண்ணாமலை அறிவித்திருப்பது, கர்நாடக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் ''நான் காவல்பணியிலிருந்து விலகுவதற்கான நேரம் வந்து விட்டது.கடந்த ஆண்டு மானசரோவர் யாத்திரை சென்ற போது எனது வாழ்வின் திருப்பத்தை நான் உணர்ந்தேன்.மேலும் ஐபிஎஸ் அதிகாரி மதுகர் ஷெட்டியின் மறைவு  என்னுடைய வாழ்க்கையை சுயபரிசோதனை செய்யும் அவசியத்தை உணர்த்தியது.தீவிர யோசனைக்கு பின்பே நான் இந்த முடிவை எடுத்துளேன்.சில காலம் குடும்பத்துடன் எனது நேரத்தை செலவிட உள்ளேன். அதற்கு பின்பு என்னுடைய அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து முடிவெடுக்க உள்ளேன். நிச்சயம் இந்த சமூகத்திற்கு என்னாலான உதவிகளை செய்வேன்'' என கூறியுள்ளார்.

இதனிடையே அண்ணாமலையின் ராஜினாமா முடிவு கர்நாடக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பணிபுரிந்த பகுதிகளை சேர்ந்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருவதுடன், அவரது நற்செயல்களை சமூக ஊடகங்களில் பாராட்டி நினைவுகூர்ந்து வருகின்றனர்.

KARNATAKA, ANNAMALAI IPS, KAILASH MANASAROVAR, IPS OFFICER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்