“இதுக்குன்னே தனி மொபைல் ஆப்.. மினிமம் டெபாசிட் கட்டி ஆடணும்”.. கோடிகளில் புரளும் ஐபிஎல் சூதாட்டம்!.. பெங்களூரு, ஹரியானாவில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மொபைல் செயலி மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து 100 கோடி ரூபாய் அளவில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்த கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்ததுடன் இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள பசீராபாத் பகுதியில் நடந்த இந்த சூதாட்டத்தை பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார் அங்கு பிரத்யேக மொபைல் ஆப்கள் மூலம் பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்திய கும்பலை சேர்ந்த தலைவன் சந்தூர் சஷாங் உட்பட அவனுடைய கூட்டாளிகள் 8 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கும்பலை சேர்ந்த 8 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

இந்த சூதாட்டத்திற்கு பயன்படுத்தபட்ட ஒரு வங்கிக் கணக்கிலிருந்து 13 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் முடக்கியுள்ளதோடு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த சூதாட்டம் நடந்ததாகவும் இதுவரை சுமார் 230 கோடி ரூபாய் அளவில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் Cricketline மற்றும் Cricket Exchanger போன்ற ஆப்களை பயன்படுத்தி கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைந்தது 50,000 ரூபாய் டெபாசிட் என்கிற நிபந்தனையுடன் இந்த சூதாட்டம் நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போட்டியின் முடிவில் பணத்தை செட்டில் செய்வது மெயின் புக்கிகளுக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை உள்ளிட்டவை சந்தூர் சஷாங் மூலம் நடைபெற்றுள்ளதாக  சைபராபாத் காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல் டெல்லி கேப்பிடல் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கடந்த சனிக்கிழமை துபாயில் உள்ள சார்ஜாவில் மோதிக்கொண்டன. இந்த போட்டியின்போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து ஹரியானா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரேவாரி என்கிற இடத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் பிடிபட்டனர். சுமார் ஆறு லட்சம் ரூபாய் 12 செல்போன்கள் ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு நோட்புக் உள்ளிட்டவை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கிரிக்கெட் சூதாட்ட புகார் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்