படிச்சதெல்லாம் போதும்...! 'ஒழுங்கா போய் கிரிக்கெட் விளையாடுற வழிய பாரு...' 'சும்மா எப்போ பார்த்தாலும் கையில புக்கு...' 'அதட்டிய அம்மா...' - ஐபிஎல்-ல் சாதித்த மகன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐபில் 14-வது கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று (20-09-201) பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்டன. நேற்றைய ஆட்டம் முதல் கொல்கத்தா அணி ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் இளம் புயல் வெங்கடேஷ் ஐயர்.

ஆறடிக்கும் மேல் உயரமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்ட வெங்கடேஷ் ஐயர், நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கி, ஆர்சிபி பவுலர்களை அடித்து துவம்சம் செய்தார்.

வெங்கடேஷ் ஐயரின் ஆட்டத்தை பார்த்த கேகேஆர் நிர்வாகமே இவர் இந்தளவு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தான் நிஜம்.

ஐபில் கிரிக்கெட் தொடரில் உள்ளூர் சாம்பியன்ஸ் முதல் உலக சாம்பியன்ஸ் வீரர்கள் என அனைத்து தரப்பிலும் கிரிக்கெட் வீரர்கள் இருப்பர். அதில், பிரபல கிரிக்கெட் வீரர்களே ஒவ்வொரு ஆட்டத்தில் சொதப்பும் போது இளம் வீரர்களே பல தொடர்களை வென்று கொடுக்கின்றனர். இந்த வரிசையில் வெங்கடேஷ் ஐயரும் அடங்குவார்.

குறிப்பாக, நேற்றைய தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய கைல் ஜேமிசன் ஓவரை, நேற்று வெங்கடேஷ் அசால்டாக டீல் செய்து அசத்தியுள்ளார்.

கடைசி வரை களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசி தள்ளினார். அதில், 7 பவுண்டரிகளும், 190 மீட்டர் அல்ட்ரா சிக்ஸும் அடக்கம். இதில் குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் வெங்கடேஷிற்கு நேற்று தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் போட்டி.

நேற்றைய ஆட்டத்தால் இன்றைய செய்திகளில் முதல் இடத்தை பிடித்த கிரிக்கெட் வீரர் வெங்கடேஷிற்கு கிரிக்கெட் தான் எல்லாமே என்று சொல்லி கொள்பவர் இல்லையாம். இவர் ஒரு வெறித்தனமான படிப்பிஸ்ட் ஆவார்.

பள்ளி காலம் முதல் கல்லூரி காலம் வரை எந்நேரமும் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தவரை அவரது அம்மா தான் கையில் பேட்டை கொடுத்து, போய் வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடு என வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியே அனுப்புவாராம்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சி.ஏ படித்து கொண்டு, இடைநிலைத் தேர்வுகளிலும் வென்றுள்ளார் வெங்கடேஷ். இந்த தேர்வுக்காக விளையாட்டை கைவிடுவது அல்லது குறைந்தபட்சம் தற்காலிகமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறுத்தி வைப்பது என்று கூட முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறிய வெங்கடேஷ், 'எனக்கு சி.எ படிப்பது பிடித்திருந்தது. ஆனால், அதன் பின் சிஏவை விட்டுவிட்டு எம்பிஏ நிதியியல் படிக்க முடிவு செய்தேன். அதற்காக கிரிக்கெட் தொடர் ஆடும் போது கூட நிறைய நுழைவுத் தேர்வுகள் எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.

ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் என்னை கிரிக்கெட் பாதையில் திசைத் திருப்பினார்கள். இப்போது நான் ஒரு கிரிக்கெட் வீரராக இல்லையென்றால் நான் ஒரு ஐஐடி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) அல்லது ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) ஆகியவற்றில் ஒரு கலக்கு கலக்கியிருப்பேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்