'கொரோனாவைக்' கொல்லும் 'புறஊதாக்கதிர் டார்ச் ...' 'மஹாராஷ்ட்ரா' மாணவர்களின் 'அசத்தல்' கண்டுபிடிப்பு... சிறந்த 'கிருமிநாசினியாக' செயல்படும் என்றும் 'விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸைக் கொல்லக் கூடிய புறஊதாக் கதிர் டார்ச் லைட்டுகளை மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
புற ஊதாக்கதிர்கள் என்றாலே ஓசோன் படலத்தை பாதிக்கும் தீய கதிர்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இப்போது வரையிலும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இதற்கு, கிருமிகளை அழிக்கும் பண்பு உள்ளது. புற ஊதாக் கதிர்கள், தரவாரியாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கானவைதான். ஆனால் 'சி' பிரிவு புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர் கீபோர்டுகள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றின் மேல்புறத்தில் இருக்கும் புறக்கிருமிகளை அழிக்கப் பயன்படுகிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக்கருவி பார்ப்பதற்கு டார்ச் லைட் போல இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் 16-33 வாட்ஸ் திறனுள்ள ஒளியின் மூலம் வைரஸைக் கொல்ல இந்த டார்ச்சைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த டார்ச் லைட்களைத் பெருமளவு தயாரிக்கும் பொறுப்பை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவர்களின் ஆய்வு வழிகாட்டியான ஆர்.ஜி.சொன்காவடே, “புற ஊதாக்கதிர்களால் கிருமிநீக்கம் செய்யப்பட்ட காய்கறிகள் உண்பதற்கு உகந்தவைதான் என்பது நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டோம். புற ஊதாக்கதிர்கள் உணவுப் பொருட்களுக்குள் கலக்காது” என்றும் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..!
- 'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்?'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'!
- 'எங்க வழி, தனி வழி'...'இந்தியர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு'...பிரபல நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!
- 7 தனிப்படைகள்... 3 மொழி போஸ்டர்!... வாட்ஸ் அப் மெசேஜ்!... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி?... தமிழக போலீஸின் தரமான 'த்ரில்' சம்பவம்!
- தினமும் சுடசுட ‘பிரியாணி’.. தாய் போல தெருநாய்களுக்கு ஊட்டிவிடும் பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- '30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'
- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனாவால் பலி || 6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவல் - அதிர்ச்சியில் உறைந்துள்ள நாடு || இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
- தமிழகத்தில் 4 வயது ‘சிறுமிக்கு’ கொரோனா தொற்று.. உறவினர்களுக்கு ‘தீவிர’ பரிசோதனை..!
- 'கொரோனா விழிப்புணர்வை பகிரும் போர்வையில்...' 'கோளாறான' ஆட்களும் 'நிறைய பேர்' இருக்காங்க.... 'ஜாக்கிரதை பெண்களே...'
- 'என் பொண்ணுக்கு பிளட் கேன்சர்'...'ஊரடங்கால் தவித்து நின்ற தாய்'... ஒரே ஒரு போன் காலில் நடந்த அற்புதம்!