'நித்யானந்தாவைப் பிடிக்க புது திட்டம்?!'... 'இந்திய அரசு கோரிக்கை'... 'சர்வதேச போலீஸ் அதிரடி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியாரான நித்யானந்தாவை, பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல் போன்ற பல்வேறு புகார்களில் பெங்களூர் மற்றும் குஜராத் காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆனால், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், 'கைலாசா' என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி, அதன் அதிபராக பதவியேற்று, அவ்வப்போது வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார், நித்யானந்தா.
அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல், நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்றால், "தலைமறைவாக இருக்கும் நபரைக் கண்டால் தகவல் அளிக்க வேண்டும்" என்பதே ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீடர் மரணம்!.. நித்தியானந்தா மாயம்... என்ன நடக்கிறது நித்தியின் ஆசிரமத்தில்?'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'சொத்துக்ளை எல்லாம் ஆளப்போவது யார்?' .. இப்போதே 'உயில்' எழுதி வைத்துவிட்ட 'நித்தியானந்தா'!
- '40 லட்சம்' பேர் விண்ணப்பம்... 'தனிநாட்டை' அமைத்தே தீருவேன்... 'சவால்' விடும் நித்யானந்தா!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'குடும்பத்தோட இல்ல.. தனியாவே வரேன்.. ஆனா'.. நித்தியானந்தாவிடம் எஸ்.வி.சேகர் வைத்த 'வித்தியாசமான' நிபந்தனை!
- 'கைலாசா' எங்கிருக்கிறது?... புதிதாக 'வீடியோ' வெளியிட்டு... 'விளக்கம்' அளித்த நித்யானந்தா!
- இந்த ஆட்டம் போதுமா?... சமூக வலைதளங்களில்.. 'தீயாய்' பரவும் வீடியோ.. நெட்டிசன்கள் கிண்டல்!
- 12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!