‘இதை செஞ்சா ஏத்துக்கிறோம்!’.. ‘கலப்பு திருமண ஜோடிக்கு’.. ‘பஞ்சாயத்து அறிவித்த பதறவைக்கும் தண்டனை’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்துக்கு உட்பட்ட குவால்டலி ஏரியாவில் உள்ளது காப் பஞ்சாயத்து கிராமம்.

இங்கு வசித்துவந்த பூபேஷ் யாதவ், ஆஷா ஜெயின் என்கிற பெண்ணை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் ஒரு சாதிமறுப்பு (கலப்பு) திருமணம் என்பதால், காப் பஞ்சாயத்து கிராமத்தைச் சேர்ந்தோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தவிர, பூபேஷ் யாதவின் சகோதரியின் திருமணத்துக்கும் ஊரார் வரவில்லை என தெரிகிறது. சாதி மாறி திருமணம் செய்துகொண்ட பூபேஷ் யாதவுடன் ஊர் மக்கள் ஒட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், அவரும் அவரது மனைவியும் செய்த தவறுக்கு மாட்டுச் சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை பருக வேண்டும் அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று அவ்வூர் பஞ்சாயத்தார் நிபந்தனை விதித்தாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு அதிர்ந்த பூபேஷ் யாதவ் அளித்த புகாரின் பேரில், சீனியர் காவல்துறை கண்காணிப்பாளரின் தலைமையிலான சர்க்கிள் ஆபீஸர்ஸ் மற்றும் இதர போலீஸார் நேரில் சென்று காப் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் ஊர்மக்களையும் கண்டித்து எச்சரித்துள்ளனர். மேலும் இது அதிகாரப்பூர்வமற்ற, முறையற்ற பஞ்சாயத்து என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

WEDDING, MARRIAGE, PUNISHMENT, PANCHAYAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்