அந்த '25 பேர்' ரிலீஸ் ஆயிட்டாங்க...! 'எப்போ என்ன வேணும்னாலும் நடக்கலாம்...' 'ரொம்ப ஆபத்து...' - 'ஷாக்' தகவலை வெளியிட்ட உளவுத்துறை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரள ஐ.எஸ். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதில் அதிக பாதிப்பு ஏற்படப்போவது இந்தியாவிற்கு தான் என பல உலக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகிறது.

தாலிபான்கள் முந்தைய ஆப்கானிஸ்தான் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் சில நாட்களுக்கு முன் விடுவிக்கும் திட்டத்தில் இருந்தனர். இந்நிலையில், தாலிபான் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தனர்.

அவர்களின் பயங்கரவாத செயல்களால் முந்தைய  ஆப்கான் அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் தாலிபான் அமைப்பு முதற்கட்டமாக, சிறையில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக விடுவித்து உள்ளது.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள  கேரளாவை சேர்ந்த 25 பயங்கரவாதிகளால் நம் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்து உள்ளது.

அதில், 'ஆப்கானிஸ்தானில் விடுவிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினரின் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப அதிக வாய்ப்புள்ளது.

இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மத்திய மாநில அரசுகள் இந்நிலையை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். அதோடு, சர்வதேச எல்லைகள் மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்