'பஸ்டே'ன்னா என்னனு தெரியுமா?'.. 'கேரளா'ன்னா என்னனு தெரியுமா?'.. அசர வைத்த மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் பஸ் டே எனப்படும் பேருந்து தினத்துக்கு காவல் துறையினர் தடைவிதித்திருந்தும், அதைப் பொருட்படுத்தாத மாணவர்கள் பஸ் டே கொண்டாடி, சமீபத்தில் ஒரு பரபரப்பான சம்பவத்தை நடத்தி சென்னையில் பீதியைக் கிளப்பினர்.

அதன்படி, சென்னை ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் மாநகரப் பேருந்தினை முற்றாக சிறைபிடித்து, பேருந்தைச் சுற்றிலும், ஈக்கள் போல் மொய்த்துக்கொண்டே பயணித்து வந்துள்ளனர். பேருந்தின் மேற்கூரையிலும், மாணவர்கள் முற்றாக அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே வந்துள்ளனர்.

அப்போது பேருந்தின் முன்பக்கமும் கூச்சலிட்டபடி, பேருந்தையும் பஸ்டேவையும் வழிநடத்திச் செல்வது போல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால், பேருந்து ஓட்டுநரும் பிரேக் போட வேண்டிய சூழ்நிலை உண்டாக, பேருந்தின் மேற்கூரையில் இருந்த மாணவர்கள் மளமளவென சரிந்து, ஒருவர் மீது ஒருவர் விழுந்து எழுந்து அடி, வலியுடன் ஓடினர்.

பேருந்து தினம் அல்லது பஸ் டே என்பது தினமும் நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பேருந்து ஊழியர்களை கவுரவித்து நன்றி சொல்வது, தினமும் சந்திக்கும் சக பயணிகளிடம் ஒரு புன்னகையை பரிசாக அளிப்பதென இருந்திருக்கலாம். உண்மையில் இப்படித்தான் கேரளாவில் பேருந்துகளை தாமே க்ளீன் செய்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அவர்களின் பணிகளுக்கு ஒத்துழைத்தும், உதவி செய்தும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.

KERALA, CHENNAIBUSDAY, MTC, KSRTC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்