முதல்ல IPS.. இப்போ IAS.. UPSC தேர்வில் கனவை வென்றெடுத்த இளம்பெண்.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிவில் சர்வீஸ் தேர்வில் ஐபிஎஸ் அதிகாரி தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “உன்னால சாதிக்க முடியாதுன்னு நெறைய பேர் சொன்னாங்க, ஆனா..!” IPL கோப்பை வென்ற தம்பிக்கு க்ருணால் உருக்கமாக வாழ்த்து..!

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022-க்கான முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தினர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த திவ்யா சக்தி யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 79-வது ரேங்க் திவ்யா சக்தி பெற்றார். அதில், அப்போது அவருக்கு ஐபிஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பே கிடைத்தது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே திவ்யா சக்திக்கு கனவாக இருந்துள்ளது. அதனால் ஐபிஎஸ் பயிற்சிக்கு மத்தியில் கடுமையாக உழைத்து மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அவர் தயாரானார்.

இந்த நிலையில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் திவ்யா சக்தி 58-வது இடத்தைப் பிடித்தார். இதனால் இப்போது அவர் ஐஏஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிகாரின் ஜலால்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா சக்தி, பிட்ஸ் பிலானியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். இதனை அடுத்து பொருளாதாரத்தில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “தோனி என்ன ப்ளேயிங் 11-ல இருந்து தூக்கிட்டாரு.. உடனே ரிட்டயர்ட் ஆகிடலாம்னு நெனச்சேன்”.. அப்போ சச்சின் சொன்ன அந்த அட்வைஸ்.. பல வருசம் கழிச்சு சேவாக் சொன்ன சீக்ரெட்..!

INSPIRING STORY, UPSC, DIVYA SHAKTI, UPSC ASPIRANT DIVYA SHAKTI, இளம்பெண், யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்