'என்னோட இந்த திறமைக்கு இன்ஸ்பிரேஷனே இவர்தான்'.. வைரலாகும் வளரிளம் பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியில் 3 இடியட்ஸ் என்கிற பெயரிலும் தமிழில் நண்பன் என்கிற பெயரில் ரீமேக்காகவும் வெளியான படங்களில் வைரஸ் எனும் பேராசிரியர் (தமிழில் சத்யராஜ் கேரக்டர்) ஒரே நேரத்தில் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தி போர்டில் எழுதுவார்.

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக அவ்வாறு செய்வதாக அந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்படும். ஆனால், அந்த கேரக்டரின் இன்ஸ்பிரேஷனால்,  சட்டீஸ்கரின் ரெய்ப்பூரில் வளரிளம் பெண் ஒருவர், மிரர் எழுத்துக்களை தனது இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறனைப்பெற்றதாகக் கூறி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார்.

ஆனால் அந்த படத்திலோ பேராசிரியர் வைரஸ் இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் எழுதினாலும், இரண்டும் ஒரே திசையில் எழுதப்படும் எழுத்துக்களுமே இடமிருந்து வலமான எழுத்துக்களாக இருக்கும். இங்கு 7வது படிக்கும் காவ்யா சௌவ்தா என்கிற அந்த பெண், தனது இரண்டு கைகளாலும் போர்டில் எழுதும்போது வலது கை, இடமிருந்து வலமும், இடது கை வலமிருந்து இடதாகவும் எழுதுகிறார்.

பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக இவ்வாறு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்த காவ்யாவின் பெற்றோருக்கு அவருக்குள் இருந்த இந்தத் திறமையே கடந்த 6 மாதங்களாகத்தான் தெரியும் என்பதும், இருவரும் காவ்யாவுக்கு உறுதுணையாக இருக்கவிருப்பதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SCHOOLSTUDENT, VIRUS, TALENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்