'வெட்டுக்கிளிகளை' விரட்ட 'பக்கா பிளான்...' கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்... உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க, 'ட்ரோன்' உதவியுடன், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. இதனால் அங்கு விவசாயப் பயிர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'ட்ரோன்' உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு, சமோத் ஆகிய பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள், கரடு முரடான பாதைகள் மற்றும் உயரமான பகுதிகளில், ட்ரோன்கள் பலனளிக்கும் என்றும், ஒரு ட்ரோன், 15 நிமிடத்தில், கிட்டத்தட்ட, 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லியை தெளித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தானில் இருந்து, மத்தியபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு வரவிருக்கும் வெட்டுக்கிளிகள், ஓரிரு நாட்களில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் வர வாய்ப்புள்ளது. இதனால், இம்மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்