எனக்கே இவரை பாக்கணும் போல இருக்கு.. ஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த வினோத வாகனம்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பால் வினியோகம் செய்வதற்கு வினோத வாகனத்தை இளைஞர் ஒருவர் பயன்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான் உங்கள நம்புறேன்.. இனி யாரும் ஆபிஸ் வரவேண்டாம்".. பிரபல நிறுவனத்தின் CEO அனுப்பிய மெயில்.. திக்குமுக்காடிப்போன ஊழியர்கள்..!

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பால் வண்டி

வித்தியாசமான படைப்புகளில் இந்தியர்கள் எப்போதும் ஒருபடி மேலே இருப்பார்கள். அதிலும் இந்த வண்டியை வடிவமைத்தவர் அதற்கும் மேலே சென்றிருக்கிறார். பார்முலா கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் வாகனத்தைப்போல சொந்தமாக ஒரு வாகனத்தை டிசைன் செய்திருக்கிறார் இவர். பால் விநியோகம் செய்ய அந்த வண்டியை இவர் பயன்படுத்தி வருகிறார். 3 சக்கரங்களை கொண்ட இந்த வாகனத்தை ஹெல்மெட் அணிந்தவாறு இந்த இளைஞர் இயக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவிவருகிறது.

அவரை சந்திக்கணும்

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,"அவருடைய வாகனம் சாலை விதிமுறைகளை பூர்த்தி செய்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சக்கரங்கள் மீதான அவரது ஆர்வம் கட்டுப்பாடு அற்றதாக இருக்கும் என்று நம்புகிறேன். நீண்ட காலமாக நான் பார்த்தவற்றுள் மிகச்சிறந்த விஷயம் இது. நான் இந்த சாலை வீரரை சந்திக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவ, நெட்டிசன்கள் "இதை பார்க்க பேட்மேன் பால் விநியோகம் செய்வது போல இருக்கிறது" என்றும் "நான் சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த பந்தய வாகனம் இதுதான்" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தானே தயாரித்த மூன்று சக்கர வாகனத்தில் பால் வினியோகம் செய்யும் இளைஞரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ANAND MAHINDRA, INNOVATIVE DELIVERY CART IMPRESSES, ஆனந்த் மஹிந்திரா, இளைஞர், டிவிட்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்