55 ஆயிரம் பேருக்கு வேலை.. கேம்பஸ் இன்டர்வியூ.. இன்போசிஸ் நிறுவனம் வேற லெவல் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு: 2022-23ம் நிதியாண்டில் நாட்டில் 55 ஆயிரம் ப்ரஷர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்குத் தேர்வு  செய்ய உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

பெங்களூரில் நடந்த நாஸ்காம் ஆண்டு நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, "ஐடி தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்துவரும் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புக் காத்திருக்கிறது. எனவே, 2022-23ம் நிதிஆண்டில் 55 ஆயிரம் ப்ரஷர்களை கல்லூரி வளாகத்துக்கே சென்று வேலைக்குத் தேர்வு செய்ய இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

2022ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம். இதனால், இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருப்பது நல்லது. இங்கு ஏராளமான திறமையான இளைஞர்களை நிறுவனம் எதிர்நோக்குகிறது. அந்த இளைஞர்களுக்கு 6 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரைதான் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் நேரடியாக பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்போசிஸ் நிறுவனம் வழங்கும் பயற்சி

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அனுபவம் உள்ள ஊழியர்கள் தங்களை புதுப்பிக்கும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். புதிதாக பணிக்கு சேரும் இளைஞர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களை புதுப்பிக்கும் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து தங்களை அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்த வேண்டும். இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களின் திறமையை மெருகேற்றும் வகையில் பயிற்சித் திட்டமும், புதிய பிரிவுக்கு மாற்றிக் கொள்ளுதல், தங்களை புதுப்பித்துக்கொள்ளும் திட்டமும் கொண்டுவர உள்ளோம்.

இதைவிட ஒரு பெரிய திட்டம்

ஏராளமான நிறுவனங்களின், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிமாற்றப் பிரிவோடு அதிகமாகப் பணியாற்ற இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பப்ளிக் க்ளவுட், ப்ரேவேட் க்ளவுட் சேவையிலும் பணியாற்றி சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.  இதனால், கல்லூரியி்ல் பயிலும் இளைஞர்கள், மாணவர்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.குறுகிய காலத்தில் புதிய திறன்களை, திறமையை வளர்த்துக்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ச்சி இருக்கிறது. குறிப்பாக க்ளவுட் சேவையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. திறமைவாய்ந்த இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்" என்று சலில் பரேக் தெரிவித்துள்ளார்.

INFOSYS, IT EMPLOYEES, CAMPUS INTERVIEW, 55 THOUSANDS YOUNGSTER, IT WORKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்