“அதெல்லாம் பொய், வதந்தி... நம்பாதீங்க! அப்டிலாம் நாங்க சொல்லவே இல்ல!” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இன்போசிஸ் நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

10-ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று இன்போசிஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் 10-ம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு பிரேரானா தொண்டு நிறுவனம் உதவுவதாக செய்தி வெளியானது. அதில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிசின் நிதி உதவியுடன் பிரேரான அமைப்பு இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த செய்தியில் இடம்பெற்ற அனைத்து தகவல்களும் தவறானவை என்று இன்போசிஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இன்போசிஸ் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பாக சமீபத்தில் வெளியான இந்த செய்தி நீண்டகாலமாக பரவி வரும் வதந்தி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகளுக்கு முழுமையாக, தமது சொந்த நிதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும் தங்கள் நிறுவனத்தின் பெயரில் வேறு ஏதேனும் போலியான அல்லது தவறான செய்திகள் பரவினால் தங்களுடைய தொலைபேசி எண் 080-26635199  மற்றும்  foundation@infosys.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்