‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தாக்கத்தால் தனது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது இண்டிகோ விமான நிறுவனம் அதனை வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை கடைப்பிடித்து வருவதால் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்தின் பயணிகள் சேவை முற்றிலுமாக முடங்கி, சரக்கு சேவை மட்டுமே நடைபெறுகிறது. இதனால் விமான நிறுவனங்கள் வருவாய் இன்றி பெருத்த சிக்கலில் உள்ளன.

இதையடுத்து இண்டிகோ நிறுவனம் தனது உயர்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் ஏப்ரல் மாத சம்பளத்தில் 25 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து,  ஊரடங்கு காலத்தில் ஊதியத்தை குறைப்பதில்லை என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஊழியர்களுக்கு தலைமைச் செயல் அதிகாரி அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ‘முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பளப் பிடித்தம் அமல்படுத்தப்படாது. ஊழியர்களின் முழு சம்பளத்தையும் ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கலாம். இருப்பினும், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த துணைத் தலைவர்கள் இந்த மாதத்தில் தாங்களாகவே சம்பளத்தை விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளனர்’ என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்