'விமானம் கிளம்புறது வரைக்கும் சும்மா இருந்துட்டு...' 'இப்போ வந்து சொல்றீங்களே சார்...' - அவரு சொன்னத கேட்டு ஆடி போன பயணிகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமானம் வானில் பறக்கவிருந்த சமயத்தில் பயணி ஒருவர் தனக்கு கொரோனா எனக் கூறி அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி விமானநிலையத்தில் இருந்து புனேவிற்கு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (6E-286) ஒன்று புறப்பட தயாராக ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என கூறி மருத்துவ சான்றுகளையும் காட்டியுள்ளார்.

இவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சகபயணி விமான ஊழியர்களிடம் உடனடியாக தெரிவித்தனர். விமானியும் உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு குழுவினரை தொடர்பு கொண்டு பேசி விமானத்தை மீண்டும் விமான நிலைய பார்க்கிங் பகுதிக்கு திருப்பினார்.

அதன்பின் கொரோனா பாதிக்கப்பட்ட பயணி தெற்கு டெல்லியில் உள்ள Safdarjung மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டதோடு, அவரின் வரிசையில் அமர்ந்திருந்த சீட் வரிசை 6, 7 மற்றும் 8-ல் இருப்பவர்கள் தனியாக நிறுத்தப்பட்டிருக்கும் கோச்சில் ஏறி தனிமை முகாமுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, பயணிகள் அனைவருக்கும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தரப்பட்டு விமானப் பயணம் முழுவதும் அதை அணிந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன் பின்னரே விமானம் புனேவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் விமானநிலையம் முழுவதும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் சிறப்பாக செயலாற்றி பயணிகளின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கும் அதன் கேபின் குழு ஊழியர்களுக்கும் பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்