கொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா?... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்?... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் முகேஷ் அம்பானியை தவிர அனைவரும் உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக வர்த்தகம் ஸ்தம்பித்துப்போயுள்ளது. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் லாக்டவுன் பிறப்பித்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டு, உற்பத்திகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனையும் இல்லாததால் பெரும் பொருட்சேதம் மற்றும் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. அத்திவாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன.

இதன் தாக்கம், இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள் கவலைக்கிடமாக உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2 மாதங்களில் தனது சொத்து மதிப்பில் 28% சரிவை சந்தித்துள்ளார். நாள் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் அந்நிறுவனத்துக்கு சுமார் 48 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பெரும் வீழ்ச்சியால் அந்நிறுவனத்தின் பொருளாதார நிலை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சரிந்துள்ளதாகவும், இதன் காரணமாக உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த அம்பானி 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதவிர உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்த அதானி 6 பில்லியன் அல்லது 37% இழப்பை சந்தித்து பட்டியலில் இருந்தே வெளியேறியுள்ளனர். மேலும், ஹெச்.சி.எல் நிறுவனம் (5 பில்லியன் நஷ்டம்) மற்றும் உதய் கொடாக் (4 பில்லியன் நஷ்டம்) நிறுவனம் ஆகியவையும் 100 பேர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்