'உண்மையிலேயே ஹேப்பி நியூ இயர் தான்!'.. ‘இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள முதல் கொரோனா தடுப்பூசிகள்!’.. DCGI அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் 'கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு' இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஏற்கனவே பிரிட்டனில் தொடங்கி உலகின் பல நாடுகளிலும் ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி தயாரிப்பினை முன்னெடுத்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் தான், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம், தமது தயாரிப்பான கோவக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிசீலித்து வந்தது.
இதனை அடுத்து, நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இதேபோல் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழு முன்னதாக பரிந்துரை செய்திருந்தது.
எனினும் இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா, “SerumInstIndia தடுப்பூசியை சேகரித்து வைத்து, இறுதியாக செலுத்தத் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசியாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பானது, பயனுள்ளது மற்றும் வரும் வாரங்களில் போடப்பட தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு முழுவதும் 1.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!.. தயார் நிலையில் சுகாதாரத்துறை!.. யாருக்கு?.. எங்கே?.. எப்போது?
- சிவப்பு எறும்பு, கொரோனாவுக்கு வில்லனா...? 'அவங்க இத ரொம்ப வருசமா சாப்பிடுறாங்க, அதனால தான்...' - '3 மாசத்துக்குள்ள முடிவெடுக்க உத்தரவு...!
- திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'
- 'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’
- ‘புது வருஷம் பொறந்த முதல் நாளேவா..!’.. சீனாவில் பரவிய ‘புதிய’ கொரோனா வைரஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- 'தமிழகத்தின் இன்றைய (31-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா...? - முழு விவரம் உள்ளே...!
- ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?
- “புத்தாண்டு பரிசாக... இந்திய மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக” - அரசு தரப்பிலிருந்து வெளியான ‘நம்பிக்கை’ தரும் 'அறிவிப்பு'!
- “தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..!” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை!!
- ‘உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ்'... 'இந்தியாவில் டிசம்பருக்கு முன்னரே’... ‘ஆனாலும் இதற்கு வாய்ப்பு குறைவு’... ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்’...!!!