'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் குறைந்து வருவதாக மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக 1,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 881 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்ச ஹர்ஷ்வர்தன் இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவே உள்ளது என்றார் அவர்.
இதேபோல் குணமடைந்திருப்போரின் எண்ணிக்கையும் 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். இதுவரை 283 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், கடந்த 7 நாட்களில் 64 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்னர், 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மாவட்டங்களில் நிலைமை சீராகி வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி அடைந்து வருவதாக தெரிவித்த ஹர்ஷ்வர்தன், எந்த நிலைமையையும் நம்மால் சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, மணிப்பூர், திரிபுரா, கோவா ஆகிய 3 மாநிலங்களில் 100 சதவீதம் ஆபத்தில்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?
- ‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
- 'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...!' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'
- கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!
- வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!
- 'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...!
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'