கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 4-வது நாடு... ஆனாலும் 'இந்த' விஷயத்தில் இந்தியா தான் நம்பர் 1... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த WHO!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4-வது நாடாக இந்தியா திகழ்கிறது. எனினும் இறப்பு விகிதத்தில் இந்தியாவின் நிலை குறைவாகவே உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை 4 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று அதில் இருந்து குணமடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக உள்ளது.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா இறப்பு இந்தியாவில் தான் குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் லட்சம் பேரில் 1 ஆக உள்ளது. அதே நேரம் இங்கிலாந்தில் 63.13 ஆகவும், ஸ்பெயினில் 60.60 ஆகவும், இத்தாலியில் 57.19 ஆகவும், அமெரிக்காவில் 36.30 ஆகவும், ஜெர்மனியில் 27.32 ஆகவும், பிரேசிலில் 23.68 ஆகவும், கனடாவில் 22.48 ஆகவும், ஈரானில் 11.53 ஆகவும், துருக்கியில் 5.97 ஆகவும் ரஷியாவில் 5.62 ஆகவும் உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்