கொரோனாவுக்கு எதிரான... இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரித்து இருக்கும் கோவாக்சின் தடுப்பூசியை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். நேற்று டெல்லியில் மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதலுடன் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சமூக மருந்து பிரிவின் பேராசிரியர் சஞ்சய் ராய் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ''தடுப்பூசியை தொடங்குவது ஒட்டுமொத்த எல்லா பரிசோதனைகளையும் சார்ந்தது. தடுப்பூசியின் செயல்திறனை சரிபார்க்க எங்களுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது,'' என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்